அஜித்குமாரின் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, பொது இடங்களில் அவரது ரசிகர்கள் செய்த அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இருந்தாலும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் பொங்கல் அன்று வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.
இன்னும் சில நாட்களே படம் வெளியாக, உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்து போட்டோக்கள் வெளியாகி, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி சமூக வலைதளங்களை மிகுந்த பரபரப்பாகியது. அவ்வப்போது ,இணையதளத்தில் Cute லுக்கில் அஜித்குமாரின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவந்தன.
தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் அவரது கோபமான லுக்கில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .