சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி 2023 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறாது என்று அந்நாட்டின் ராணுவ தளபதியான அல் ஃபுர்கான் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களுக்கு தற்போதே ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று சூடான் நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளார்கள்.
இந்த பேரணியில் ஈடுபட்ட 10,000 பேரை இராணுவத்தினர்கள் கண்ணீர்புகை வீசியும் ,தடியடி நடத்தியும் கலைத்துள்ளார்கள். இதற்கான காரணமாக அவர்கள் பேரணியை அமைதியாக நடத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.