வடக்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 44 மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருவதால் மக்கள் தண்ணீருக்கு பெரும் அவதி அடைந்து வருகின்றன.ர் அந்த வகையில் கேமரூன் எல்லை கிராமம் ஒன்றில் நீர்நிலையை பகிர்ந்துகொள்வதில் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் கலவரமாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதில் நாற்பத்தி நான்குக்கும் மேற்பட்டோர் இதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.