யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 06-12-2021 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் குறித்த குடும்பத்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது, சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த யேசுதாஸ் றூபன் வயது 41 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்,
சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், சீட்டுப் பணத்தை இன்னொருவர் மோசடி செய்ததால் ஏற்பட்ட விரக்தியே தற்கொலைக்கு காரணம் என இவரது மனைவியின் நெருங்கிய உறவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.