சீனாவில் கடந்த 2019-ஆம் வருடத்தில் தோன்றிய கொரோனா, படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அதன்பிறகு, சீனா சில மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடி கொண்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.
குறைவான தொற்றுகள் பதிவான நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும், சுமார் 127 நபர்களுக்கு புதிதாக கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 44 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஹெனான் மாகாணத்தில் தான் அதிகமாக 102 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
பீஜிங் மாகாணத்தில் அடுத்த மாதத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அங்கு ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.