ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையில் இயங்கும் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2015 -ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், ஈரான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. அதேபோன்று, ஏமன் அரசாங்கத்திற்கு, சவுதி தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது.
எனவே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி கூட்டுப்படைகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று, அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு சவுதி கூட்டுப்படை பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை நோக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், 11 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படையில் முக்கிய தளபதி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.