லீட்ஸில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி, மரங்கள் நிறைந்த பாதையால் சென்றுகொண்டிருந்த போது அம்மாணவியை றோட்டில் வைத்தே கற்பழித்த சம்பவம் கல்லூரி மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட அம்மாணவி, 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபரினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இவர் வெள்ளை நிறமாகவும், உயரமான தோற்றத்தையுடையவெரனவும் தெருவிக்கப்படுகின. இச்சம்பவம் பான்ஸிஅகடமிக்கும், நியு பார்ன்ஸின்மேப்பிள் கிராம பகுதிக்கும் இடையே 3.30 மணிஅளவில் இடம்பெற்றதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை கொலை மற்றும் முக்கிய விசாரணைக் குழுவின் தற்காலிக துப்பறியும் கண்காணிப்பாளர் டோனி நிக்கல்சன் கூறுகையில் ,நாங்கள் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாகவும்,விரிவாகவும் நடத்துகிறோம்.சம்பவத்தின் எந்தப் பகுதியையும் நேரில் பார்த்தவர்கள் அல்லது விசாரணைக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவலைக் கொண்டவர்கள், குறிப்பாக அந்த பகுதியில் சந்தேக நபராக அடையாளங்காணக்கூடியவர்களை பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.