உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 17 வயதான இளம்பெண் ஒருவரின் தாயார், இளம்பெண்ணின் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “17 வயது நிரம்பிய இளம்பெண், தங்கப்பாண்டி என்பவரால் கருவுற்று, தற்போது ஆறு 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளம்பெண்ணும் கருவை கலைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் அந்த இளம் பெண்ணின் கருவை கலைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்படுகிறது.
வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் இந்த வழக்கின் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை இரண்டு மாதங்களுக்கு உள்ளாக தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது. மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.