2 பேருக்கு ஒமைக்ரான் ; இரும்பு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட 2 கோடி மக்கள்! கர்ப்பிணி பெண்களையும் விட்டுவைக்கவில்லை -VIDEO-

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி, 31 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசின் புதிய ஆபத்தான மாறுபாடு ஓமைக்ரான் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த மாறுபாட்டை தவிர்க்க சீனா தனது நாட்டில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அங்கு , 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஓமைக்ரான் பதிப்பு 2 பேருக்குமட்டுமே கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஷிஜியாசுவாங் மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா இல்லா சீனா என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க லட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்யாங் உட்பட பல நகரங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்களை அவர்ங்கள் வீடுகளில் அடைத்து தனிமைபடுத்தி சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

அதேசமயம் சீனா இதுவரை மொத்தம் 2 கோடி மக்கள் அன்யாங் மற்றும் யூசோ நகரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்துள்ளதாக தகவலல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad