சோமாலியா தலைநகரில் பயங்கர சம்பவம்: 8 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

Avisione என்ற வீதியல் துப்பாக்கி துளைக்காத கார்கள் உள்ளடங்கலான ஒரு வாகனத் தொடரணியை குறிவைத்து மேற்படி கார் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் குழு உரிமை கோரியதுடன், இது “வெளிநாட்டு அதிகாரிகளை” குறிவைத்து நடத்தப்பட்டதாக தாக்குதல் என்று ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறியும் உள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad