இலங்கையில் பிறந்த ஜோர்ஜ் அழகையா, பின்னர் பிரித்தானியாவுக்கு குடியேறி பட்டப் படிப்பை முடித்து. அதன் பின்னர் BBC செய்திச் சேவயின் சர்வதேச பிரிவின் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகள் கடமை ஆற்றினார். அவரது ஆங்கில திறமையை பார்த்தும், செய்தி வாசிக்கும் திறனைப் பார்த்தும் பல வெள்ளை இன மக்களே வியந்தது உண்டு. ஒரு பொழுதிலும் பிழை விட்டது இல்லை, திக்கு தடுமாறியது இல்லை. நேர் சீராக செய்திகளை சொல்லிக் கொண்டே செல்வார். அவருக்கு வயிற்றில் குடலில் ஏற்பட்ட கான்சர்(புற்று நோய்) படு வேகமாக பரவியது. இதனை அடுத்து அவர் வேலையில் இருந்து விலகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு புற்று நோய் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது… இருப்பினும்..
இறுதியில் புற்று நோய் தான் வெல்லும். அதனால் தான் எனக்கு ஒரு முடிவு வரும் என்று மிகவும் துணிவாக பேசியுள்ளார் அழகையா. இலங்கை தமிழரான ஜோர்ஜ் அழகையா 1955ம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். அவருக்கு வயது 66. சிறு வயதில் அவர் லண்டன் வந்து, டியூரஹாம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். அவரது மனைவியின் பெயர், பிரான்சிஸ். மற்றும் அடாம், மத்தியூ என்று 2 ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.