யாழில் மாப்பிள்ளை வேட்டிக்குள் பூனை. திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்.

யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்று. கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கலியாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண் பார்க்கும் படலம் முடிவடைந்து கலியாணத்திற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாப்பிளை தங்கியிருந்த வீட்டில் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து பொன்னுருக்கு நடைபெற இருந்த நேரத்தில் வேட்டியுடன் நின்றிருந்த மாப்பிளையின் காலுக்குள் புகுந்து விளையாடியுள்ளது சிறிய பூனைக் குட்டி ஒன்று.

ஒரு கட்டத்தில் வேட்டிக்குள் புகுந்து மாப்பிளையின் காலை பிறாண்டியுள்ளது பூனைக்குட்டி. மிகவும் கடுப்படைந்த மாப்பிளை பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக நிலத்தில் துாக்கி அடித்துள்ளார். அந்த இடத்திலேயே பூனைக்குட்டி பலியாகியுள்ளது.

இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டுக்காரர் பொன்னுருக்கையும் விட்டுவிட்டு ஓடித்தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad