வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்த வகையில், வடகொரியா அரசு, சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. அதன் பிறகு, ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை, அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹைபர் சோனிக், ஒளியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணை. இதனால் உலக நாடுகள் இதனை எதிர்த்தன. மேலும், அந்நாட்டில் நடந்த ஏவுகணை பரிசோதனைகளில் முதல் தடவையாக அதிபர் கலந்து கொண்டது, இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.