ஹாங்காங்கின் ஸ்டாண்ட் நியூஸ் இணையதளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனியும் இதனை நடத்த முடியாது எனவும், நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளது. முன்னதாக இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள் 6 பேர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனநாயக கருத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்த ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதால் தொடர்ந்து இந்த நிறுவனமும் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.