மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓம்பிரகாஷ் திவாரி என்ற நபர் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தார் .அதன் பிறகு அவர் மும்பையில் வாய்ப்பு தேடி வரும் பலரிடம் தான் ஒரு படத்தை டைரக்ட் பண்ணுவதாக கூறி ஏமாற்றி வந்தார் .அவரின் பேச்சை உண்மையென்று நம்பிய கல்காத்தாவை சேர்ந்த ஒரு பெண் சமூக ஊடகம் மூலம் அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் .அவர் சில பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.
அந்த பெண்ணை ஒரு வெப் சீரிஸில் நடிக்க வைப்பதாக அந்த பிரகாஸ் உறுதியளித்து அவரிடம் சில அந்தரங்க போட்டோக்களை வாங்கினார் .பின்னர் அந்த படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி அவரிடம் பாலியல் உதவி கோரினார் .இதனால் அந்த பெண் அந்த பிரகாஷ் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பிரகாஷ் பற்றி விசாரித்த போது அவர் ஒரு போலியான நபர் என்று கண்டறிந்தார்கள் .பின்னர் அவரை சனிக்கிழமை இரவு தானே மாவட்டத்தில் உள்ள திட்வாலாவில் இருந்து மலாட் காவல்துறையின் சைபர் செல் போலீஸ் மூலம் கைது செய்தனர் . போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர் .