பிரித்தானியாவில் ஆழும் கான்சர் வேட்டிவ் கட்சியின், செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் பொறிஸ் ஜோன்சன் சமீபத்தில் நடத்திய கழியாட்ட பார்டி தான். மேலும் மக்கள் வரிப் பணத்தில் 58,000 ஆயிரம் பவுண்டுகளை எடுத்து தனது வீட்டை திருத்தி அமைத்துள்ளார். இதற்கான ஒப்புதலை அவர் முறையாக பெற்றே செய்தார். இருப்பினும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வெகுவாக சரியத் தொடங்கியுள்ளது. இதன் காரணத்தால் லேபர் கட்சிக்கான செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில், பொறிஸ் ஜோன்சன் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.