வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

வெள்ளவத்தை, கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் நேற்று செவ்வாய்கிழமை (11-01-2022) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடையது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதை பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவரின் சகோதரர் பொலிஸாருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

54 வயதான குறித்த நபர், மனநோய் காரணமாக நீண்ட நாட்கள் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் என தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad