சமூக வலைதளங்களில் அன்னபூரணி சாமியார் டிரெண்டாகி வரும் நிலையில், யாரும் யாரையும் நம்பி ஏமாறக் கூடாது என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி உள்ளார். கடந்த சில தினங்களாக திடீரென முளைத்த பெண் சாமியார் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்ப பிரச்சினைக்காக அவர் கலந்து கொண்டார். அந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது போலி சாமியாரின் முகத்திரையை கிழித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று அன்னபூரணி, நாளை வேறு எவராவது வருவார்கள். நாங்கள் ஏமாற்றுவதற்கு தயாராக இருந்தால் எங்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் தான் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.