கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிபடை அதிகாரிகளினால் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. வெலிகடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.