கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் “நாம் அனைவரும் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி பரபரப்பாக பேசியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் ஆபத்தான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் முழு அளவிலான தடுப்பூசி செலுத்தி கொள்வது மற்றும் நல்ல தரமான முக கவசங்களை அணிவது ஆகியவற்றின் மூலம் நம்மால் கொரோனாவுடன் வாழ முடியும். மேலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மரணம் ஏற்படாமல் தடுக்கவும் முடியும் என்று கூறியுள்ளார்.