முல்லைத்தீவில் கணவனை விட்டுவிட்டு சின்ன வயது இளைஞனோடு சல்லாபித்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த யோகராசா றாஜினி (36) என்ற இளம் குடும்ப பெண்ணே, நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி, 22, 16 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த ஆண் மிகவும் இளையவர் என்றும் அறியப்படுகிறது.

முதற்கணவர் தட்டையர்மலை முத்துஐயன்கட்டில் வசித்துவந்துள்ளார். றாஜினி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சொந்த வீடு இல்லாத நிலையில் பற்றையால் சூழப்பட்ட காணி ஒன்றில் ஒரு சிறிய குடிலிலேயே இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது. ஆனால் தப்பியுள்ள காதலனை, பொலிசார் சற்றும் எதிர்பாராத விதமாக கைது செய்துள்ளார்கள். இதனை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப் படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad