அண்மையில் தெஹிவளை பிரதேச கடலில் உலாவித் திரிந்த முதலை, தற்பொழுது வெள்ளவத்தை கடற்பரப்பில் உலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதலையின் தாக்குதலுக்கு இலக்கான 58 வயதான நபர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இந்த முதலையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனை பிடிக்குமாறும் தெஹிவளை மக்கள் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த முதலை வெள்ளவத்தை பகுதியில் உலவுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.