யாழில் கனடாவில் இருந்து வந்தவனுடன் மனைவி உறவு. கணவன் தற்கொலை முயற்சி.

யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா சென்று தற்போது யாழில் தங்கியிருக்கும் குடும்பஸ்தர் ஒருவருடன் கள்ள தொடர்பில் ஈடுபடுவதை அறிந்த கணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரான கணவர் தனது மனைவி அலுவலக நிமிர்த்தம் கொழும்பு செல்வதாகத் கூறி கொழும்பு சென்றுள்ளார். அதே வேளை மனைவி கடமைபுரிந்த வங்கியில் நத்தார் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதுடன் அதற்காக வங்கி அதிகாரியான பெண்ணின் குடும்பத்திற்கும் அழைப்பிதழ் அனுப்பபட்டு அவரது பிள்ளைகளுக்கும் பரிசு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மனைவிக்கு கூறாது குறித்த விழாவுக்கு தனது இரு பிள்ளைகளுடனும் சென்றுள்ளார். அங்கு அவர் சென்று தனது மனைவி கொழும்பு சென்ற விடயத்தையும் விசாரித்த போது மனைவி தனிப்பட்ட விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக வங்கியிலிருந்து கணவர் அறிந்துள்ளார்.

கணவர் மனைவிக்கும் கூறாது கொழும்புக்கு தனது பிள்ளைகளுடன் சென்று மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து ஆராய்ந்த போது மனைவியின் கனடாவிலிருந்து வந்த பாடசாலை கூட்டாளியுடனான கள்ளத் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கணவரின் தங்கையின் வீட்டில் கணவர் தற்கொலைக்கு முயன்று தங்கையின் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad