ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
அதன்படி இசைக்கும் தலிபான்கள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதாவது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள்.
இந்நிலையில் பாக்தியா மாநிலத்திலுள்ள இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடிங்கிய தலிபான்கள் அதனை நடுரோட்டில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள்.
இதனை கண்ட அந்த இசையமைப்பாளர் கதறி கதறி அழுதுள்ளார். ஆனால் தலிபான்கள் கதறி கதறி அழுத அந்த இசையமைப்பாளரின் அவல நிலையைக் கண்டு குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார்கள்.