ஆவா ரௌடிக்குழுவின் தலைவன் ஓணான் வினோதன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான் என அதிர்வு இணையம் அறிகிறது. இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இன்று சட்டத்தரணிஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சில மாதங்களின் முன்னர் மருதனார்மட சந்தியில் பழக்கடை நடத்தும் ஒருவர் வெட்டப்பட்டிருந்தார். ஆவா ரௌடிக்குழு தலைவன் வினோதன் என்பவருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே, இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஆவா ரௌடிக்குழு தலைவன் வினோதன் தேடப்பட்டு வந்தார். அது தவிர களவு. சங்கிலி அறுப்பு. வாள் வெட்டு. வீடு உடைப்பு என பல வழக்குகளில் தேடப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்த நிலையில், ஆவா குழு தலைவனும், இன்னொருவரும் சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.