கொழும்பு, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.