கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் புத்தாண்டையொட்டி எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த போராட்டம் சில பகுதிகளில் கலவரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபரான காசிம் ரஷ்யப் படைகளின் உதவியை நாடியுள்ளார். அதன்படியே ரஷ்ய நாட்டுப் படைகள் கடந்த 5 ஆம் தேதி கஜகஸ்தானிற்கு வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள்.