தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான மாதவன் இரட்டை வேடத்தில் நடித்த ரெண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆன அனுஷ்கா ( Anushka ) பட வாய்ப்புகளை அதிகப்படுத்த மொபைலா மொபைலா என்ற பாடலில் படு கவர்ச்சியான உடையில் இளைஞர்கள் மனம் துடிக்கும் வகையில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டார்.
இதன் பிறகு அனுஷ்காவுக்கு மார்க்கெட் எகிறியது. என்னதான் அனுஷ்கா தெலுங்கு நடிகை என்றாலும் அனுஷ்கா நடித்த படங்கள் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது அருந்ததி, வேட்டைக்காரன் ,சிங்கம் 1 ,சிங்கம்2, சிங்கம்3 , இரண்டாம் உலகம் ,என்னை அறிந்தால், லிங்கா, தாண்டவம், வானம், பாகுபலி 1, பாகுபலி 2, ருத்ரமாதேவி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது.
அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது.மேலும், இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையைகூட்டி அப்படத்தில் மிகவும் குண்டான பெண்ணாக காணப்பட்டார். இருப்பினும் இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
மேலும் அந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார்.அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அனுஷ்கா தற்போது ஜிம் உடையில் கும்மென இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது.