மேடையின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தபோது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த சூப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் ஓரேகான் மாகாணம் யூஜின் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (14-01-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் லின் பீன் அண்ட் ஜே பாங் மற்றும் பிற கலைஞர்கள் பங்கேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். சிலர் தரையில் படுத்துக்கொண்டனர்.
இதனால் அங்கு குழப்பமான சூழல் உருவானது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள், 4 ஆண்கள் என 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
எனினும், துப்பாக்கி சூடு தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அங்கிருந்த ரசிகர்ள் ளிடம் துப்பாக்கி சூடு தொடர்பாக ஏதாவது துப்பு கிடைத்தால் கூறும்படி கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.