அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் மஹிமா நம்பியார்..!

தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை மஹிமா நம்பியார் ( Mahima Nambiar ). தமிழில் சாட்டை படத்தின்மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது புதிய போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் மலையாளத்தில் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகை மஹிமா நம்பியார்.

தமிழில் சாட்டை படத்தில் இவர் மாணவியாக நடித்திருந்தார்.அந்தப் படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. இவருக்கு சிறப்பான துவக்கத்தையும் கோலிவுட்டில் ஏற்படுத்திக் கொடுத்தது.இதையடுத்து மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடி வீரன் என்று தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். தான் ஏற்கும் கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.மகாமுனி படத்தில் இவரது கேரக்டர் சிறப்பாக அமைந்தது.

ஆர்யா, இந்துஜா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்தை சாந்தகுமார் இயக்கியிருந்தார். கடந்த 2019ல் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்று வருகிறது.

இந்நிலையில், மகிமா நம்பியார் கடற்கரையில் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் முதுகில் ‘இன்பினிட்டி’ என்ற வாசகத்தை டாட்டூவாக குத்தி உள்ளது தெரியும்படி அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad