வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் அந்நாட்டின் தலைவர் பொறுப்பை ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் பஞ்சம் நிலவுவதால் எப்போதும் மிரட்டும் படியாகவே தகவல் தெரிவிக்கும் கிம் ஜாங் உன் தற்போது மிகவும் சாந்தமான முறையில் பேசியுள்ளார்.
அதாவது கொரிய தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர் நடப்பாண்டில் அந்நாட்டு மக்களுக்கு உணவுதான் முக்கியமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் வட கொரிய மக்களுக்கு உணவை தவிர்த்து அணு ஆயுதங்கள் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி வடகொரிய மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்கில் 5 ஆண்டு திட்டம் ஒன்று வகுக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் பேசியுள்ளார்.