கனடாவில் இந்தப் பெண்ணைத் தெரியுமா?

 

அவர் செய்த தவறு இதுதான்… வெளியான புகைப்படம் கனடாவில் போதை மருந்துகளை கடத்திய வழக்கில் கைதாகி பரோலில் விடுதலையான பெண் தலைமறைவான நிலையில் அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Nanaimo நகரை சேர்ந்த 45 வயதான கோர்டினி கிராஸ் என்ற பெண் போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி பரோலில் விடுவிக்கப்பட்டார் கிராஸ்.

இதையடுத்து நகரில் உள்ள வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார் கிராஸ். ஆனால் கிராஸ் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ விடுதலைக்கான நிபந்தனைகளை மீறியதற்காக அவரைக் கைது செய்ய கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராஸ் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் அது குறித்து கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad