ஜேர்மனியில் 43 வயது நபர் ஒருவரை கொலை கொலை செய்து அவருடைய ஆணுறுப்பை துண்டித்து உட்கொண்ட ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் இப்படியொரு கொடூர வழக்கை சந்தித்தது இல்லை என தீர்ப்பளித்த நீதிபதி அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேர்மனியில் பெர்லின் நகரில், கடந்த செப்டம்பர் 2020ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.
மெக்கானிக் ஒருவர் மாயமான நிலையில் அவரை தீவிரமாக தேடி வந்த பொலிஸார், காட்டுப்பகுதியில் இடுப்பு எலும்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அது குறித்த விசாரணையில் அடிப்படையில் அந்த மெக்கானிக் நர மாமிசம் உட்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு ஆசிரியரால் கொல்லப்பட்டதாகவும், அவருடைய ஆண் உறுப்பை துண்டித்த அந்த ஆசிரியர் அதனை உட்கொண்டதாகவும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெர்லினைச் சேர்ந்த 42 வயதாகும் ஆசிரியரான Stefan-க்கு, டேட்டிங் ஆப் மூலம் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்த 43 நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
எனவே இருவரும் ஒருவரையொரு நேரில் சந்திக்க விரும்பி ஆசிரியரின் வீட்டுக்கு மெக்கானிக் சென்றிருக்கிறார். அன்றைய தினம், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த ஆசிரியர், மயங்கிய நிலையில் இருந்த மெக்கானிக்கை வெட்டிப் படுகொலை செய்து உடலை துண்டாக்கி காட்டுப்பகுதியில் வீசியிருக்கிறார். ஆனால், உண்மையில் அந்த ஆசிரியர் நரமாமிசம் உட்கொள்ளும் பழக்கமுடையவர் என கூறப்படுகிறது. மெக்கானிக்கை கொலை செய்து அவருடைய ஆண் உறுப்பை துண்டாக்கி அதனை ஆசிரியர் உட்கொண்டதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
நரமாமிசம் உட்கொள்ளும் விருப்பம் குறித்தும் அதிலும் கிளர்ச்சியுடையவைகளை செய்வது குறித்து ஆசிரியர் stefan தனது ஒரே பாலின நண்பர்களுடன் உரையாடல்களின் போது பேசியிருப்பது பொலிஸாருக்கு தெரியவந்தது. ஆனால், மெக்கானிக் தனது வீட்டுக்கு வந்த போது இயற்கை மரணம் ஏற்பட்டதாகவும், பயத்தில் அவரின் உடலை வெட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் ஆசிரியர் stefan தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் ஆசிரியர் stefan வீட்டில் இருந்து ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் படங்களில் வருவதைப் போல உடல் பாகங்களை வெட்டும் பயங்கர ஆயுதங்கள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நீதிபதி அதிர்ச்சி:
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த பெர்லின் நீதிமன்றம் இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட ஆசிரியர் Stefan-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மதியாஸ் ஷெர்ட்ஸ் தீர்ப்பளித்தார். மேலும், தனது 30 ஆண்டுகால நீதிமன்ற அனுபவத்தில் இப்படியொரு வழக்கை எதிர்கொண்டதில்லை என நீதிபதி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதே நேரத்தில் தீர்ப்பை நீதிபதி வெளியிட்டபோது, குற்றவாளியான stefan எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாக காணப்பட்டார். இந்த வழக்கு ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.