முன்னேறும் ரஷ்ய டாங்கிகளை அழிக்க உக்கிரைனுக்கு டாங்கர் பேஸ்டர் குண்டுகளை வழங்கியது பிரிட்டன் !

சுமார் 1 லட்சம் ரஷ்ய படைகள் உக்கிரைன் நாட்டு எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு. 5,000 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய டாங்கிகளும் எல்லையில் நிற்கிறது. ரஷ்யாவின் மிகப் பெரிய பலலே இந்த டாங்கிகள் தான். இந்த கவச வாகன துணைகளோடு தான் ரஷ்ய படைகள் முன்னேற முடியும். எனவே ரஷ்யா உக்கிரைன் நோக்கி முன்னேறினால், அதனை உடைக்க, முதலில் தேவையான விடையம் கவச வாகனங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தான். அந்த வகையில், ரஷ்ய கவச வாகங்களை பொடி பொடியாக்கவல்ல அதி நவீன ஏவுகணைக் குண்டுகளை பிரித்தானியா உக்கிரைன் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானம் ஜேர்மனி ஊடாக உக்கிரைன் செல்ல இருந்தது. ஆனால் ரஷ்யா மீது உள்ள நடுக்கத்தில் ஜேர்மனி…

குறித்த விமானம் தமது நாட்டுக்கு மேல் பறக்க தடை விதித்தது. இருப்பினும் குண்டுகள் ஏற்றப்பட்ட விமானம் வேறு பாதை ஊடாக உக்கிரைன் சென்றடைந்துள்ளது. இது ரஷ்யாவை மேலும் கோபமடையச் செய்துள்ள போதும். பிரித்தானியா தனது நிலையில் இருந்து சற்றும் தளரவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகிறது. உலக வல்லரசு நாடுகளான, பிரான்ஸ் , ஜேர்மனி போன்ற நாடுகள் ரஷ்யாவை ஏன் பகைக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad