வட கொரியா தற்போது தயாரித்து, பரீட்ச்சித்துப் பார்த்துள்ள ஹப்பர் சோனிக் ஏவுகணைகள், மணிக்கு 3,800 KM வேகத்தில் செல்ல வல்லவை என்றும். இதன் காரணத்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அடுக்கை உடைத்துக் கொண்டு அது ஊடுருவிச் சென்று தாக்க வல்லது என்றும் கூறப்படுகிறது. மணிக்கு 3,800KM வேகத்தில் இந்த ஏவுகணை பயணிக்க கூடியதாக இருப்பதால், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் எந்த ஒரு ராடர் திரைகளிலும், இந்த ஏவுகணை அகப்படாது. இதனால் வட கொரியாவின் ஏவுகனை வருவதை அமெரிக்கா கண்டு பிடிப்பது இயலாத காரியம். இதனை அடுத்து பெண்டகன்(அமெரிக்க பாதுகாப்பு சபை) அமெரிக்க அரசுக்கு சில பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது. அந்த அறிக்கையில்…
ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கண்டறியும் திறன் கொண்ட புதிய வகை சாட்டலைட்டை விண்ணில் ஏவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தரையில் உள்ள ராடர்களால் சில ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே அமெரிகா வெகு விரைவில், அதி நவீன சாட்டலைட் ஒன்றை விண்ணில் ஏவலாம் என்றும் கூறப்படுகிறது. சிறிய நாடாக இருந்து கொண்டு , இன்று வரை அமெரிக்காவுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருப்பது வட கொரியா தான், என்றால் அது மிகையாகாது.