தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் தங்கள் நாட்டிற்குள் பரவுவதற்கு சர்வதேச தபால்களே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
அதாவது வெளிநாடுகளிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்த தபால்களின் மூலமாக தான் தொற்று தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச தபால்களின் உறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் தொற்று நிறுபனமானதாகவும் சீன அதிகாரிகள் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்கள்