வரலட்சுமி சரத்குமார் ( Varalakshmi Sarathkumar ) “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார்.இவர் தமிழில் நடித்த “தாரை தப்பட்டை” திரைப்படமும், மலையாளத்தில் “கஷாபா” திரைப்படமும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.
பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நம்ம சரத் மகள்.தற்போது “சக்தி”, “காட்டேரி”, “சேசிங்”, “பாம்பன்” என அவர் வயதை விட பெரியதாக நீண்டு கொண்டே போகிறது.
விஜயின் சர்க்கார், விஷாலின் சண்டைக்கோழி2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கதாநாயகியாக நடிப்பதை விட இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில்இவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான க்ராக், நாந்தி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. தற்போது இவர் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் இவர் நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் அதை வதந்தி என்று ஓப்பனாக தெரிவித்து விட்டார்.
இந்தநிலையில், ஒரு இவர் நடித்த “மத கஜ ராஜா” படத்திலிருந்து சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். வானவில் வண்ண நிற உள்ளாடை அணிந்துள்ளதால் ஒரு நிமிஷம் எல்லோருக்கும் தலை கிறுகிறுத்து விட்டது.