மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பதற்கு என்று ஒரு குழு இயங்கி வருகிறது. இந்த குழுவில் மொத்தம் 1,000 தம்பதிகள் உறுப்பினராக உள்ளனர். இந்தக் குழுவில் உள்ள மனைவிகளை மற்ற ஆண்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஒரு பெண்ணை மூன்று ஆண்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகளும் இருக்கின்றனவாம். மனைவிகளை மற்ற ஆண்களுக்கு விருந்தளிக்கும் அவருக்கு பணம் கிடைக்கிறது.
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் அண்மையில் போலீசில் அந்த அதிர்ச்சிப் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அந்தப் பெண் தனது கணவர் குறித்து போலீசில் அளித்த புகாரில், தம்பதிகளை பகிர்ந்துகொள்ளும் குரூப் என்ற ஒரு குழு டெலிகிராம் ஆப் இயங்கி வருகிறது. அந்த குழுவில் தனது கணவரும் உறுப்பினராக இருக்கிறார். மற்ற ஆண்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தி வற்புறுத்துகிறார் என்று அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர் உள்பட 7 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெலிகிராம் ஆப் தம்பதிகளை பகிர்ந்துகொள்ளும் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தம்பதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஆண்கள் தங்களது மனைவிகளை மற்ற ஆண்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் மற்றவர்களின் மனைவிகளுடன் உடலுறவு வைத்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட அந்த 7 பேரும் 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட டெலிகிராம் குரூப்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது உயர் அதிகாரிகளும் தனியார் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
டெலிகிராமில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நபர் இரண்டு மூன்று தம்பதிகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கின்றார்கள். அந்த நேரத்தில் கணவன் மனைவிகள் பரிமாற்றம் நடக்கிறது. சில நேரங்களில் ஒரே பெண்ணை மூன்று ஆண்கள் பகிர்ந்து கொண்ட சம்பவம் நடந்துள்ள விசாரணை தெரியவந்திருக்கிறது. இப்படி மனைவிகளை மற்ற ஆண்களுக்கு அளிக்கும் நபருக்கு பணம் கிடைக்கிறதாம்.
இந்த குழுவில் சேர 14 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். போலியான புரொஃபைல் மற்றும் போலியான பெயர்களில் உறுப்பினர்களின் சுயவிவரப் பெயர்களை பயன்படுத்துகின்றார்கள். குடியிருப்புகள் மற்றும் ஓய்வு விடுதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தம்பதிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதையடுத்து 7 பேரை பிடித்து எடுத்து மேலும் 25 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களாக உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காயம்குளம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இதே போன்று மனைவிகளை மாற்றிக்கொள்ளும் குற்றச் செயல் கண்டு பிடிக்கப்பட்டு அது ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இப்படி ஒரு குரூப் உருவாகியிருக்கிறதும், சமூக வலைத்தளங்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருவதும் போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.