சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமொன்று உருவாகவுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.

எனினும் கோவிட் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டிருந்தது.

‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad