கனடாவுக்கு புலம்பெயர போறீங்களா….? அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்….!!

 

கனடாவுக்கு புலம்பெயர உங்களுக்கு திட்டம் இருக்குமேயானால் அதற்குஎக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry), மாகாண நாமினி திட்டம் (Provincial Nominee Program – PNP), கியூபெக் புலம்பெயர்தல் திட்டம் (Quebec immigration) மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஸ்பான்சர் செய்யும் திட்டம் (family sponsorship) ஆகிய திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்கள் பின்வருமாறு, கனடாவைப் பொருத்தவரை எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் தான் மிகச் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 திட்டங்கள் உள்ளன. அவை எளிதான முறையில் கனடாவுக்கு புலம்பெயர வழிவகுக்கும் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் உங்களை கைவிடும் பட்சத்தில் நீங்கள் அடுத்ததாக நாமினி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனையடுத்து கியூபக் நுழைவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிகம் பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமாகிய கியூபக்கு நீங்கள் புலம்பெயர நினைத்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். இந்த ஒவ்வொரு திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மேலும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள் என்பதை பொறுத்து விதிமுறைகள் மாறும். மேலும் இதனை பற்றி அறிய இணையத்தை பார்வையிடுவது சிறப்பாக அமையும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad