அவுஸ்திரேலியா சென்று அங்கே உயிரிழந்த யாழ் தமிழன் இவர் தான் : சிறிபிரகாஸ் செல்வராசா

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார். அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்திருக்கிறார்கள். வெகுநேரம் தேடிய பின்னர், அன்று மாலையளவில் சிறிபிரகாஸின் சடலம் Geelong கடற்கரையில் தென்மேற்கு கரையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad