இராணுவத்தை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளேன்! கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே தனது நோக்கம் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ பகுதியில் விவசாயிகளை நேற்று சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இயற்கை உரம் தொடர்பிலான தெளிவூட்டல்கள் சரியான வகையில் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விவசாய அறுவடைக்கு இராணுவத்தை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில விவசாயங்களுக்கு செயற்கை உரம் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வாறான விவசாய நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad