பிரித்தானியாவில் ஒரு தமிழர் குழு, 13வது திருத்தச் சட்டத்தை, இலங்கையில் உடனே அமுல் செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை எழுதி. அதில் சிலரது கையொப்பங்களை வாங்கி விட்டு. அதனைக் கொண்டு போய் லண்டனில் உள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்க இருந்தது. அதற்கான முன் அனுமதியையும், குறித்த குழு பெற்று இருந்தது. நேற்றைய தினம்(11) தம்மை வந்து சந்திக்குமாறு இந்திய தூதுவரும் கூறி இருந்தாராம். ஆனால் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் கொடுக்க முற்பட்டவேளை தான், இந்திய தூதுவர் டெல்லி சென்றுவிட்டதாக அங்கே இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அட எமக்கு அப்பாயின்மென்டை தந்து விட்டு தூதுவர் எஸ்கேப் ஆகி விட்டாரே என்று…
தமிழ் குழு ஒன்று பெரும் ஆதங்கத்தோடும் ஏமாற்றத்தோடு வீடு திரும்பியுள்ளதாக. அந்த குழுவில் இருந்த நபர் ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். தற்போது சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் இலங்கையில் தங்கி உள்ளார். இலங்கையை காப்பாற்ற பெரும் திட்டத்தோடு அவர் கொழும்பில் உள்ள நிலையில். இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் ஓடுப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இன் நிலையில் 13வது மண்ணாங்கட்டியாவது என்று தான் இந்தியா நினைத்திருக்கும். மீண்டும் மீண்டும் தமிழர்கள் ஏன் சென்று இந்தியாவின் காலில் விளவேண்டும் என்று புரியவில்லை.
இது இவ்வாறு இருக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் 13ம் திருத்தச் சட்டத்தை நாம் ஏற்கவில்லை என்று பொன்னம்பலம் அறிவித்துள்ளார். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் தான் 13ம் திருத்தச் சட்டம் என்பதனை அவருக்கு யார் தான் புரியவைக்கப் போகிறார்கள் ?