பிரித்தானிய மகாராணி எலிசபெத் அம்மையார், தனது மகன் அன்ருவின் ராஜசீக பட்டத்தை கலைத்துள்ளார். இதனால் அவருக்கு பல நாடுகளில் கிடைத்து வந்த இமியூனிட்டி என்ற பாதுகாப்பு அற்றுப் போயுள்ளது. இதனை அடுத்து அவர் சில வேளைகளில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதோடு. அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. உலகில் சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளில், பிரித்தானிய அரச குடும்பத்தின் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்க்கிறது. அன் நாடுகளில் அரச குடும்பத்திற்கு எதிராக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. இப்படியான ஒரு நிலையில் ..
மகாராணியார் அன்ருவின் பாதுகாப்பை அகற்றியுள்ளார். இதனால் இனி அமெரிக்க நீதிமன்றம் அன்ருவுக்கு எதிராக எந்த உத்தரவை வேண்டுமானாலும் போட முடியும். பல வருடங்களுக்கு முன்னர். இளவரசர் அன்ரூ, அமெரிக்காவில் வேர்ஜீனியா என்ற 17 வயதுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தற்போது அந்தப் பெண், நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு தான் சூடு பிடித்து வருகிறது.