ஆப்கானிஸ்தானில் கடைகளில் வைக்கப்படும் பெண் பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது, எல்லாவற்றையும் வெட்ட வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளதால், பொம்மைகளின் தலைகளை கடைக்காரர்கள் வெட்டி வருகின்றனராம்.
This is Herat where the Taliban authorities have asked clothing shops to behead all “female mannequins” calling them “un-Islamic”. Herat was called “the pearl of Khurasan” by Rumi and has been considered the cultural capital of #Afghanistan. pic.twitter.com/CUBA6fSE74
— Zia Shahreyar l ضیا شهریار (@ziashahreyar) January 3, 2022
தலிபான்கள் வந்தது முதல் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகின்றனர். அவற்றை வேறு வழியில்லாமல் மக்கள் ஏற்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொம்மைகள் மீது கை வைத்துள்ளது தலிபான் அரசு.
அதாவது ஜவுளிக் கடைகளில் ஆளுயர பொம்மைகளை வைத்திருப்பார்கள். அந்த பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது என்று தற்போது தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோல தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிரானது. எனவே தலையில்லாமல்தான் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து தற்போது தலையுடன் கூடிய பொம்மைகள் அனைத்துக்கும் தலையை வெட்டி வருகின்றனர் கடைக்காரர்கள். ஹெராட் நகரில் ஒரு இடத்தில் மொத்தமாக பொம்மைகளை படுக்க வைத்து தலையை ரம்பத்தால் அறுக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாச்சார தலைநகராக கருதப்படுவது ஹெராட் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். அப்போது முதல் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளைப் போட்டபடி உள்ளனர். பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவையும் அங்கு பறிக்கபப்ட்டுள்ளது. பெண்கள், சிறார்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. அங்கு இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது பொம்மைகளையும் அவர்கள் விடவில்லை.