உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படு காயமடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.