யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகைரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகைரதம் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை குறித்த யுவதி தற்கொலை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் யுவதி ரயிலில் பாய முற்பட்ட போது தந்தை கத்தியபடி தடுக்க முற்பட்டே காயமடைந்ததாகவும் நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.