நடிகை நித்யா மேனன் ( Nithya Menen ) தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.
ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது , சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் நடித்துள்ளார்.
இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.காருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நித்யா மேனன் தமிழில் 2 படங்களிலும் தெலுங்கு மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து நித்யாமேனன் அளித்துள்ள பேட்டியில், ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்ததை சர்ச்சையாக்கினர்.
அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் பாகுபலி நடிகரும் இல்லை. அதனால் அவர் எனக்கு தெரியாது என உண்மையை சொன்னேன். ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டு ஆனபோதிலும் என்னால் மறக்க முடியவில்லை.
இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? என்று கலாய்த்தனர். ஆனால், நித்யா மேனன் இதற்காக தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார்.