யாழ் பொடியனுடன் தொடர்பில் இருந்து பல லட்சங்களை இழந்த வெள்ளவத்தை அன்ரி. அதிர்ச்சியில் மாணவனின் தாயார்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெள்ளவத்தையில் வசிக்கும் 45 வயதான மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரிடம் 18 லட்சம் ரூபா பணம் வாங்கிய பின் ஏமாற்றியுள்ளதாக குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்து மாணவனின் தாயாரிடம் முறையிட்டுள்ளார். 

பணத்தைத் தரவில்லை எனின் பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் தாயாருக்கு தெரிவித்துள்ளார். தனது மகன் இவ்வளவு தொகையை எதற்காகப் பெற்றார் என்ற அதிர்ச்சியில் தாயார் உறைந்து போயுள்ளார். மாணவனுக்கு தந்தை இல்லை எனவும் மாணவனுடன் சேர்ந்து மூன்று சகோதரர்கள் எனவும் குறித்த மாணவனே கடைசிப் பிள்ளை எனவும் தெரியவருகின்றது.

தனது மகன் குறித்த பெண்ணை எவ்வாறு தொடர்பு கொண்டார்…. ஏன் பணம் இவ்வளவு பெற்றார் என்ற அதிர்ச்சியில் உறைந்த தாயார் மகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மகன் சரியான முறையில் பதிலளிக்காமல் சமாளித்து வருவதாகவும் நேரில் வந்து விளங்கப்படுத்துவதாகவும் மகன் கூறியதால் தாயார் மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad