இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகை கௌசல்யாவை ( Kausalya ) தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டது. ஆரம்ப காலத்தில் விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தவரைக் கூட்டி வந்து அதே விஜய் யின் வாயால் அக்கா என்று அழைக்க வைத்தார்கள் திருமலை படத்தில்.
அந்தப் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக்கப்பட்டார் கவுசல்யா. இதனால் பொறுத்தது போதும் பொங்கி எழு எனமனோகரா ஸ்டைலில் குதித்தார் கெளசல்யா.
தனது எடை கூடிவிட்டதையும், உடல் கவர்ச்சி காட்டும் லாவகத்துக்கு வந்துவிட்டதையும் சுட்டிக் காட்ட அரை, குறை உடைகளில் ஆல்பங்கள் எடுத்து தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில்ரவுண்டுக்கு விட்டார்.கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சில படங்களில் நடித்து வேகமாக முன்னுக்குவந்து அதே வேகத்தில் காணாமல் போனவர்.
தமிழ் கைவிட்டாலும் மலையாளத்தில் தாய் மொழியான கன்னடத்திலும் சில வாய்ப்புக்கள் வந்தன. ஆனால்,நினைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் எப்படியாவது தமிழில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும்என்று வெறி கொண்டு அலைகிறார்.தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்தவர் கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன.பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.
ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார். தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன.பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.
இதனை பார்த்த ரசிகர்கள், கௌசல்யா-வா இது..? என்று புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.